நிஜ நிழல்

இன்று காலை எடுத்த புகைப்படம் (புகை இல்லாமல் Digitalல எடுக்கும் படத்துக்கு என்ன பெயர் ? வெறும் படம்-னு சொல்ல முடியாது…)

Ojas Shadow

காலை ஏழரை மணிக்கு, கோவிலுக்கு வெளியில் சில படங்கள் எடுத்துவிட்டு பார்தேன், என் நீண்ட நிழல் நிஜமாகவே தெரிந்தது, கேமராவின் கண்ணில். நிழலுக்கு தான் எத்தனை குணாதிசயங்கள். வெயிலுடன் வளர்ந்து மறையும் ஆற்றல் கொண்டது. கண் கட்டு வித்தைகள் செய்யவல்லது. இருப்பதை, இருப்பது போலவும், பெரியதாகவும், சிறிதாகவும் வெய்யிலுக்கு ஏத்தவாரு வரையும். நம் மனமும் இது போல தானோ? சிலறின் அன்பை அப்படியேயும், மிகையாகவும், குறையாகவும் எண்ணங்களுக்கேற்ப்ப, பழைய நினைவுகளுக்கு தகுந்தவாறு பாவித்து கொள்கிறது. மைய்யிலா வெளிச்ச தூரிகையில் வெய்யில் வரையும் ஓவியமிது.

என்றும் என்னுடன் இருந்து….
….ஒளியுடன் வெளியில் சேர்ந்து,
அன்றும் மழையுடன் கரைந்து….
….ஒலியின்றி வெயிலில் விரிந்து,
நிழலே நிஜமானாய் !

பின் குறிப்பு :

Wordpress 2 years அக்டோபர் 12ஆம் தேதியுடன், நான் வோர்ட்பிரஸ் தளத்தில் பதிவு செய்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டனவாம். மிக்க மகிழ்ச்சி, கூகிள் பிளாகரிலிருந்து இங்கு நான் குடிபெயர்ந்து வந்தேன், உங்களுடன் கூட சேர்ந்து மகிழ்கிறேன். WordPress தம்பிக்கு என் ஆசிகளும் வாழ்த்துக்களும். 2003லில் துவங்கிய உன் சேவை மேலும் வளர்க, என்னையும் வளர்க்க !

யாம்

இந்த மாத இறுதி தலைப்பு : self portrait

எப்படி இருக்கேன்னு பார்த்து சொல்லுங்க :

நிழல் படம்

நிழல் படம்

சரியாக ஒரு மாதத்துக்கு முன் இந்த Ph’ojas தளத்தை துவங்கினேன். முதல் நாளே இந்த கடைசி தலைப்பை பார்த்தேன், வயிற்றில் புளி கரைத்த எபக்ட் வந்து. இருந்தும் மனதை திடப்படுத்தி கொண்டேன். திடீர் என்று ஒரு நாள் தோன்றிய ஐடியா தான் இந்த நிழல் படம். வயிற்றில் பால் வார்த்த மாதிரி இருந்தது. இது போல ஒரு படத்தை பிடிக்க பல நாள் காத்து இருந்தேன்.

நானும் தமிழும் ஒரு கிராமத்துக்கு சென்று இருந்தோம், அப்பொழுது ஏதேச்சியாக இந்த படத்தை எடுத்து விட்டு, பார்த்தேன், திருப்தி மேலிட்டது. வலது புரத்தில் இருப்பவர் திரு தமிழ் தம்பி, இன்னொருவன், அடியன். [எனக்கு தெரிந்து, இதுவே, நான் இணையத்தில், போடும் முதல் சுயப் படம்.] நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றால், எங்கள் நிழல்களும் ஒருங்கே சேர்ந்து சொல்கிறது “நாங்களும் தான்” !

மேலும் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் தினமும் இது போலவே மொக்கை போட முடியாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கிறேன். உங்களுகும் ஒரு தொல்லை மிச்சம். வரம் ஒரு முறை ஏனும், ஒரு படத்தை வெளிக் கொண்டு வருகிறான். என்னை ஊக்குவித்த தமிழ் தம்பிக்கும், ரஞ்சனி மாமிக்கும் நன்றிகள் பல.

உங்களுள் ஒருவன், உங்களை போல் ஒருவன்,
ஓஜஸ் அ 🙂