யாம்

இந்த மாத இறுதி தலைப்பு : self portrait

எப்படி இருக்கேன்னு பார்த்து சொல்லுங்க :

நிழல் படம்

நிழல் படம்

சரியாக ஒரு மாதத்துக்கு முன் இந்த Ph’ojas தளத்தை துவங்கினேன். முதல் நாளே இந்த கடைசி தலைப்பை பார்த்தேன், வயிற்றில் புளி கரைத்த எபக்ட் வந்து. இருந்தும் மனதை திடப்படுத்தி கொண்டேன். திடீர் என்று ஒரு நாள் தோன்றிய ஐடியா தான் இந்த நிழல் படம். வயிற்றில் பால் வார்த்த மாதிரி இருந்தது. இது போல ஒரு படத்தை பிடிக்க பல நாள் காத்து இருந்தேன்.

நானும் தமிழும் ஒரு கிராமத்துக்கு சென்று இருந்தோம், அப்பொழுது ஏதேச்சியாக இந்த படத்தை எடுத்து விட்டு, பார்த்தேன், திருப்தி மேலிட்டது. வலது புரத்தில் இருப்பவர் திரு தமிழ் தம்பி, இன்னொருவன், அடியன். [எனக்கு தெரிந்து, இதுவே, நான் இணையத்தில், போடும் முதல் சுயப் படம்.] நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றால், எங்கள் நிழல்களும் ஒருங்கே சேர்ந்து சொல்கிறது “நாங்களும் தான்” !

மேலும் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் தினமும் இது போலவே மொக்கை போட முடியாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கிறேன். உங்களுகும் ஒரு தொல்லை மிச்சம். வரம் ஒரு முறை ஏனும், ஒரு படத்தை வெளிக் கொண்டு வருகிறான். என்னை ஊக்குவித்த தமிழ் தம்பிக்கும், ரஞ்சனி மாமிக்கும் நன்றிகள் பல.

உங்களுள் ஒருவன், உங்களை போல் ஒருவன்,
ஓஜஸ் அ 🙂

ஜிஃப்

இன்றைய தலைப்பு : something that made u smile this year

சீக்கிரம் சிரிங்க :

:)

🙂

இந்த மாதிரி படத்துக்கு பெயர் GIF -> Graphics Interchange Format, ஏனெனில் இவைகள் .gif என்ற முடியும் கோப்புகள். புகைப்படமும் இல்லாமல், வீடியோவும் இல்லாம், ரெண்டும் கெட்டான் ஜாதி….. இந்த வருடம் இதற்கு 25ஆம் பிறந்தநாளாம். ஜீ-பிளஸ் மூலம் தான் இப்படி ஒரு வகை படங்கள் இருகின்றது, என்றே தெரிய வந்தது. facbookகில் இந்த வகை படங்களை காண முடியாது, ஏன் என்றால், இந்த படங்கள் அங்கு வேலை செய்யாது. கடந்த ஒரு வருடமாக இது போல பல படங்களை, பதிவு எழுத்துவதற்கென்றே சேர்த்து வைத்து வந்துள்ளேன். தமிழ் தம்பி அடிக்கடி சொல்வான் : அவைகளை சீக்கிரம் பயன்படுத்து என்று. இன்று செய்து விட்டேன். மகிழ்ச்சி. எங்க இன்னும் ஒரு முறை சிரிங்க பார்போம் 🙂 இப்படியே இருங்க 😉

பூக்கள்

இன்றைய தலைப்பு : how do u relax -> ஊர் மேய்வது

கல்கத்தா தக்க்ஷிநேஷ்வரம் காளி கோவில் நுழைவில் :

மலர் மாலை

மலர் மாலை

பாட்டியின் மன அலைகள் : அத்தான் எங்கே, அவருக்கு கட்டி முடிந்த மலர் மாலைகள் மட்டும் இங்கே 😉

relax என்பது தனியாக செய்யும் காரியம் அல்ல. எல்லா நேரமும் ரிலாக்ஸ் நேரம் தான். அதுவும் குறிப்பாக ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டால், இது போல அழகு காட்சிகளை மெளனமாக ரசிப்பது மிக பிடிக்கும். கண்ணுக்கு இந்த காட்சிகள் விருந்தெனில், காதுகளுக்கு இசை என்னும் உணவு ஊட்டப்பட்டு வரும். இது போல நொடிக்கு நொடி இன்பம் கொண்ட தருணங்கள் பல !

தமிழ் விளையாட்டு !

இன்றைய தலைப்பு : on the floor => தரையில் கிடப்பது

இன்று வீட்டில் ஏகப்பட்ட விருந்தாளிகள். அதில் பல வாண்டுகளும் சேரும் . பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை திட்டுவது மிக சிரமம். அவர்களுக்கு சிலவற்றை புரியவைப்பது பெரும் தவம் போன்றது. அதுவும் இக்காலத்து குட்டிகள் எதற்கு எடுத்தாலும் ‘ஏன்’, ‘Why?’ என்ற கேள்வி வேறு. பொறுமை தான் வேண்டும். அவர்கள் சந்தோசத்தை பார்த்தால் சிறிது பொறாமை கூட வந்து. எதை கண்டும் அஞ்சாத, அந்த, அன்பின் சிரிப்பு சப்தங்கள் மட்டுமே சொர்கம் என மனம் சொன்னது.

தமிழ்-ஓஜஸ்

தமிழ்-ஓஜஸ்

பல பல விளையாட்டு சாமான்கள் தரை எங்கும் சிந்தி கிடந்தன. எங்கள் வீட்டில், பெண் குழந்தைகள் ஜாஸ்தி, எனவே இந்த சிட்டி சாமான்கள், சின்ன சின்ன, வண்ண வண்ண சமையல் சாமான்கள் தான் அதிகம். இருந்தும் மேலே உள்ளது போல சிலவன உள்ளன. ‘ஓஜஸ்-தமிழ்‘ படம் என் கைவரிசை. எனக்கும் தம்பி தமிழுக்கும் பல கோட்பாட்டுகளில் வேறுபாடு உள்ளது. இருந்தும் இந்த ‘a’/அ  போல/தொடங்கி  பல ஒற்றுமைகள் !!!

தமிழில் எழுத்துகளின் எண்ணிக்கை மிக அதிகம். இருந்தும் இது போல விளையாட சாமான்கள் தேவை : தமிழ் வளர்க, தமிழ் கற்க !!! ஆங்கில CROSSWORD board game போல, தமிழிலும் எனக்கு விளையாட ஆசை 🙂

கண்ணில் தெரியும், கனவுகள் மெய்படும் காலம், கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது, பிடிக்க வேண்டியதுதான் பாக்கி <- இது நம் சோம்பிலின் விளைவு!

] விசுவல் எபக்ட்ஸ் ஸ்பான்சர் -> pixlr.com [