யாம்

இந்த மாத இறுதி தலைப்பு : self portrait

எப்படி இருக்கேன்னு பார்த்து சொல்லுங்க :

நிழல் படம்

நிழல் படம்

சரியாக ஒரு மாதத்துக்கு முன் இந்த Ph’ojas தளத்தை துவங்கினேன். முதல் நாளே இந்த கடைசி தலைப்பை பார்த்தேன், வயிற்றில் புளி கரைத்த எபக்ட் வந்து. இருந்தும் மனதை திடப்படுத்தி கொண்டேன். திடீர் என்று ஒரு நாள் தோன்றிய ஐடியா தான் இந்த நிழல் படம். வயிற்றில் பால் வார்த்த மாதிரி இருந்தது. இது போல ஒரு படத்தை பிடிக்க பல நாள் காத்து இருந்தேன்.

நானும் தமிழும் ஒரு கிராமத்துக்கு சென்று இருந்தோம், அப்பொழுது ஏதேச்சியாக இந்த படத்தை எடுத்து விட்டு, பார்த்தேன், திருப்தி மேலிட்டது. வலது புரத்தில் இருப்பவர் திரு தமிழ் தம்பி, இன்னொருவன், அடியன். [எனக்கு தெரிந்து, இதுவே, நான் இணையத்தில், போடும் முதல் சுயப் படம்.] நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றால், எங்கள் நிழல்களும் ஒருங்கே சேர்ந்து சொல்கிறது “நாங்களும் தான்” !

மேலும் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் தினமும் இது போலவே மொக்கை போட முடியாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கிறேன். உங்களுகும் ஒரு தொல்லை மிச்சம். வரம் ஒரு முறை ஏனும், ஒரு படத்தை வெளிக் கொண்டு வருகிறான். என்னை ஊக்குவித்த தமிழ் தம்பிக்கும், ரஞ்சனி மாமிக்கும் நன்றிகள் பல.

உங்களுள் ஒருவன், உங்களை போல் ஒருவன்,
ஓஜஸ் அ 🙂

ஜிஃப்

இன்றைய தலைப்பு : something that made u smile this year

சீக்கிரம் சிரிங்க :

:)

🙂

இந்த மாதிரி படத்துக்கு பெயர் GIF -> Graphics Interchange Format, ஏனெனில் இவைகள் .gif என்ற முடியும் கோப்புகள். புகைப்படமும் இல்லாமல், வீடியோவும் இல்லாம், ரெண்டும் கெட்டான் ஜாதி….. இந்த வருடம் இதற்கு 25ஆம் பிறந்தநாளாம். ஜீ-பிளஸ் மூலம் தான் இப்படி ஒரு வகை படங்கள் இருகின்றது, என்றே தெரிய வந்தது. facbookகில் இந்த வகை படங்களை காண முடியாது, ஏன் என்றால், இந்த படங்கள் அங்கு வேலை செய்யாது. கடந்த ஒரு வருடமாக இது போல பல படங்களை, பதிவு எழுத்துவதற்கென்றே சேர்த்து வைத்து வந்துள்ளேன். தமிழ் தம்பி அடிக்கடி சொல்வான் : அவைகளை சீக்கிரம் பயன்படுத்து என்று. இன்று செய்து விட்டேன். மகிழ்ச்சி. எங்க இன்னும் ஒரு முறை சிரிங்க பார்போம் 🙂 இப்படியே இருங்க 😉

தமிழ் ம(\மா)யம்

இன்றைய தலைப்பு : mess -> கூட்டு குழப்பங்கள் 😉

ஒரு வெட்டி வேலையாக இருந்த பொழுது, நண்பர்களின் சாமான்களை எல்லாம் ஒன்று சேர்த்து வைத்து எடுத்தப் பாடம் :

எப்படி ?

எப்படி ?

அந்த படத்தில் தெரியும் classmate ‘notepad’ பற்றி சொல்லியேயாக வேண்டும், ஏனெனில் அது வரலாற்று சிறப்பு மிக்கது. தமிழ் தம்பி, எப்பொழுதும் கையில் இதை வைத்திருப்பார். அவர் பதிவு எழுத, ட்வீட் செய்ய தேவையானவற்றை குறித்து கொள்வர். ஒரு நாள் அந்த குறிப்புக்கள், விஸ்வரூபம் எடுத்து, பதிவாக வடிவம் பெரும். அது மட்டும் அல்ல, அதற்கு பக்கத்தில் உள்ள ரெனால்ட்ஸ் பேனா மற்றும் நோக்கியா செல்பேசி அனைத்தும் அவருடையாதே ! வாழ்க தமிழ் 🙂 [உன்னிப்பாக கவனித்தி பார்க்கவும், ரெனால்ட்ஸ் பேனாவினுள் தெரிவது என்ன ? களவு போகாமல் இருக்க, இந்த பில்ட் அப், இத நா சொல்லல]

கல்லணை

இன்றைய தலைப்பு : outdoors -> வீட்டுக்கு வெளியே

கல்லணை – கரிகாலப் பெருவளத்தானின் மாபெரும் சாதனை !

அப்பப்பா அணை !

அப்பப்பா அணை !

தமிழ் தம்பி சொல்லி விட்டார் : பாரதியார் கவிதையாப் போடுற, கொஞ்சம் நிறுத்திக்கோ. வேறு ஏதாவது கவிதப் போடு. எனவே அவரிடம் சிறு வேண்டுகோள்: தலைப்புக்கு சம்பந்தமா நீங்களே, ஒரு சின்ன  கவிதை எழுதி கொடுங்கள் ! மக்கள் மகிழ்வர் !!! அட்வான்ஸ் நன்றிகள் தம்பி 🙂

(தமிழ் பதில்)

ஊர்ல எத்தனையோ ஆட்களை பார்த்திருக்கேன்…பழகிருக்கேன்…..ஆனா சாமி உன்ன மாதிரி என்னை யாருமே மாட்டிவிட்டதே கிடையாது!!!

கவிதையாம்….

கவிதை……

அக்கவிதையன்றி…..

எக்கவிதையும்….

பாரதிபோல் எக்காலமும்…..

யான் எழுதிடல்…..அரிதிலும்….அரிது!!!

(இதுவே கவித தான் தம்பி!)