திசையெங்கும் இசை !

Mediumமுக்கு சென்று பல நாளாகியும் ஏதும் எழுதவில்லை, எழுத தோண வில்லை என்பதே உண்மை. இருந்தும் ஒரு நாள், இசையை பற்றி பொதுப்படையாக எழுதலாம் என் முடிவு செய்தேன். கற்பனையை கொஞ்சம் சீண்டி விட்டு (?!) எழுதியும் முடித்தேன். (நீங்களும் படிக்க -> https://medium.com/music-is-life/5709f556fe13)

வாழ்வின் இசை

வாழ்வின் இசை

எதவாது படம் போடலாம் என முன்னேமே திட்டம் செய்தன். இந்த படத்தில் நடுவில் இருக்கும் குறிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பிக்ஸெல்லார் நோக்கி எக்ஸ்பிரஸ்சாக பயணம் செய்தேன். மாத்தி மாத்தி வண்ணங்களை பூசி, வடிவமைப்பை மாற்றி, இன்னும் சில வடிவங்கள் சேர்த்து விளையாடி முடித்தேன். தம்பி பார்த்து விட்டு சொன்னான், “படம் செமடா !

எனக்கும் பிடித்து இருந்தது, புதிய உபுண்டு (13.10) நிறுவிய பின், Wallpaperராக செட் செய்துள்ளேன். (Dimensions : 1920 x 1024 pixels) என் இரண்டாம் வெற்றி முயற்சியை பகிர்ந்து கொள்ள, இதோ இங்கும் வந்தேன்.

திசை திசை எங்கினும் 
பரவிடும் தமிழிசை
மயங்கிவரும் பலருடனே
ஒலிந்து நின்றேனே !

பாம்பே ஜெயஸ்ரீ Wallpaper

பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ பற்றி அறிமுகம் தேவை இல்லை. கர்நாடக இசை, ஸல், ஹிந்துஸ்தானி, புயூஷன், சினமா என்று அவர்களின் குரல் பன் மொழிகளில்  நம்மிடையே உள்ளது. சமீபத்தில் அவரது குரு, வயலின் மேதை லால்குடி ஜெயராமன் காலமானார்.

தமிழ் தம்பி தனக்கு பிடித்தமான இசை மேதைகளின் படங்களை, அழகாக desktop wallpaperராக வைத்திருப்பார், அதனை முன்னிட்டு நானும் முயற்சி செய்தேன். இணையத்தில் கிடைத்த இலவச wallpaper உருவாக்கி கொண்டு இதனை தயாரித்தேன். ‘பாம்பே ஜெயஸ்ரீ wallpaper’ என்று கூகிள் பண்ணி, சரியான படங்கள், சரியான resolutionநில் இல்லவே இல்ல.

இந்த படத்தின் resolution 1366*768 (hd). கொஞ்சமாக pixlr.comடும் பயன்படுத்தினேன் 🙂

பாம்பே ஜெயஸ்ரீ

பாம்பே ஜெயஸ்ரீ