நிஜ நிழல்

இன்று காலை எடுத்த புகைப்படம் (புகை இல்லாமல் Digitalல எடுக்கும் படத்துக்கு என்ன பெயர் ? வெறும் படம்-னு சொல்ல முடியாது…)

Ojas Shadow

காலை ஏழரை மணிக்கு, கோவிலுக்கு வெளியில் சில படங்கள் எடுத்துவிட்டு பார்தேன், என் நீண்ட நிழல் நிஜமாகவே தெரிந்தது, கேமராவின் கண்ணில். நிழலுக்கு தான் எத்தனை குணாதிசயங்கள். வெயிலுடன் வளர்ந்து மறையும் ஆற்றல் கொண்டது. கண் கட்டு வித்தைகள் செய்யவல்லது. இருப்பதை, இருப்பது போலவும், பெரியதாகவும், சிறிதாகவும் வெய்யிலுக்கு ஏத்தவாரு வரையும். நம் மனமும் இது போல தானோ? சிலறின் அன்பை அப்படியேயும், மிகையாகவும், குறையாகவும் எண்ணங்களுக்கேற்ப்ப, பழைய நினைவுகளுக்கு தகுந்தவாறு பாவித்து கொள்கிறது. மைய்யிலா வெளிச்ச தூரிகையில் வெய்யில் வரையும் ஓவியமிது.

என்றும் என்னுடன் இருந்து….
….ஒளியுடன் வெளியில் சேர்ந்து,
அன்றும் மழையுடன் கரைந்து….
….ஒலியின்றி வெயிலில் விரிந்து,
நிழலே நிஜமானாய் !

பின் குறிப்பு :

Wordpress 2 years அக்டோபர் 12ஆம் தேதியுடன், நான் வோர்ட்பிரஸ் தளத்தில் பதிவு செய்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டனவாம். மிக்க மகிழ்ச்சி, கூகிள் பிளாகரிலிருந்து இங்கு நான் குடிபெயர்ந்து வந்தேன், உங்களுடன் கூட சேர்ந்து மகிழ்கிறேன். WordPress தம்பிக்கு என் ஆசிகளும் வாழ்த்துக்களும். 2003லில் துவங்கிய உன் சேவை மேலும் வளர்க, என்னையும் வளர்க்க !

கடல் காவேரி

இந்த சனிக்கிழமை நண்பர்களுடன் பயணம் இனிதே சென்றது, நடுவில் காவேரியை தாண்டி சென்றோம். ஆஹா வெள்ளமாக ஓடும் நதி, பார்க்க பார்க்க வெல்லமாக இனித்தது.

பொன்னி தாய்

பொன்னி தாய்

பல காலம் முன் வீட்டில் சொல்லி சொல்லி மனப்பாடம் செய்து வைத்த சிவன் பாடல் நெஞ்ஞில் உதித்தது :

நன்றுடையானை தீயது இல்லானை,
நரை வெள்வேறு ஒன்று உடையானை !
உமை ஒரு பாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை,
சிராப்பள்ளிக் குன்று உடையானை – கூற
என் உள்ளம் குளிரும்மே !

(திருஞானசம்பந்தர்)

நல்லதைக் கொண்டவன், தீயதே இல்லாதவன், வெண்மை (நரை) நிறம் கொண்ட எருதை உடையவன். உமையாம்பிகையை ஒரு பாகத்தில் கொண்டவன். அடைய முடியாதை செல்வத்தையும் புகழுக்கும் உடையவன் , திருவின் மொத்த உருவம் அவன். (திரு)சிராப்பள்ளி குன்றை தன் வசம் கொண்டவன், இப்படி பட்ட எம்பிரானை, தாயுமானவனை பற்றிக் கூறக்கூற என் உள்ளம் குளிர்ந்து போகிறது.

இவ்வளவு பார்த்து விட்டு கோவிலுக்கு செல்லாமல் திரும்ப முடியவில்லை. அவன் அருளால் தரிசனம்(, நண்பர்களுடன்) இனிதே முடிந்தது.

இன்று 172டாவது உலக புகைப்பட தினம், வாழ்த்துக்கள் அனைவருக்கும். என்னை ஊக்குவித்த தம்பிக்கும் தோழிக்கும் நன்றி பல. (இந்த வருடம் மறக்க முடியாத ஒன்று நடந்துள்ளது, என் புகைப்டம் என் desktop wallpaerராக மாறியுள்ளது #மகிழிச்சி #பெருமை #என்_அளவில்_சாதனை)