பூக்கள்

இன்றைய தலைப்பு : how do u relax -> ஊர் மேய்வது

கல்கத்தா தக்க்ஷிநேஷ்வரம் காளி கோவில் நுழைவில் :

மலர் மாலை

மலர் மாலை

பாட்டியின் மன அலைகள் : அத்தான் எங்கே, அவருக்கு கட்டி முடிந்த மலர் மாலைகள் மட்டும் இங்கே 😉

relax என்பது தனியாக செய்யும் காரியம் அல்ல. எல்லா நேரமும் ரிலாக்ஸ் நேரம் தான். அதுவும் குறிப்பாக ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டால், இது போல அழகு காட்சிகளை மெளனமாக ரசிப்பது மிக பிடிக்கும். கண்ணுக்கு இந்த காட்சிகள் விருந்தெனில், காதுகளுக்கு இசை என்னும் உணவு ஊட்டப்பட்டு வரும். இது போல நொடிக்கு நொடி இன்பம் கொண்ட தருணங்கள் பல !

தமிழ் ம(\மா)யம்

இன்றைய தலைப்பு : mess -> கூட்டு குழப்பங்கள் 😉

ஒரு வெட்டி வேலையாக இருந்த பொழுது, நண்பர்களின் சாமான்களை எல்லாம் ஒன்று சேர்த்து வைத்து எடுத்தப் பாடம் :

எப்படி ?

எப்படி ?

அந்த படத்தில் தெரியும் classmate ‘notepad’ பற்றி சொல்லியேயாக வேண்டும், ஏனெனில் அது வரலாற்று சிறப்பு மிக்கது. தமிழ் தம்பி, எப்பொழுதும் கையில் இதை வைத்திருப்பார். அவர் பதிவு எழுத, ட்வீட் செய்ய தேவையானவற்றை குறித்து கொள்வர். ஒரு நாள் அந்த குறிப்புக்கள், விஸ்வரூபம் எடுத்து, பதிவாக வடிவம் பெரும். அது மட்டும் அல்ல, அதற்கு பக்கத்தில் உள்ள ரெனால்ட்ஸ் பேனா மற்றும் நோக்கியா செல்பேசி அனைத்தும் அவருடையாதே ! வாழ்க தமிழ் 🙂 [உன்னிப்பாக கவனித்தி பார்க்கவும், ரெனால்ட்ஸ் பேனாவினுள் தெரிவது என்ன ? களவு போகாமல் இருக்க, இந்த பில்ட் அப், இத நா சொல்லல]

கோழி !

இன்றைய தலைப்பு : lunchtime -> உணவு நேரம்

ஒரு கிராமத்தில் எடுத்தது :

கோழிகள் தோழிகள்

குடும்பத்துடன் உணவு உண்ணும் பழக்கம் குறைந்து வருகிறது. இந்த கோழிகளிடமிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் அது, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. தினமும் ஒரு முறையேனும், இந்த மாதிரி குடும்பம் முழுவதும் கூடி அமர்ந்து, உணவையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டு, வாழ்கையின் உன்னத்தருணங்களை ரசித்து மகிழுங்கள் 😉

மரபு !

இன்றைய தலைப்பு : tradition -> மரபு

திருச்சி புத்தக கண்காட்சியில் :

புத்தகங்கள்

நானும், தம்பி தமிழும் சேர்ந்து கொண்டு இந்த புத்தக கண்காட்சிக்கு சென்றோம். செப்டம்பர் மாதத்தில் கூட நல்ல வெயில். புது புத்தகங்கள், அல்லது ஒரு புகழ் பெற்ற, பிரபல அல்லது அதிகம் விற்கும் புத்தகத்கங்களை, படத்தில் உள்ளது போல அடுக்குவது மரபு. குழந்தைகளுக்கான நூல்களும் , சமையல் சார்ந்த நூல்களும் மிகுந்து இருந்தன. என்னை பொறுத்த மட்டில் கல்கி தான் வசூல் ராஜா. தமிழ்நாட்டில், இது எழுதப்படாத விதி போலும் : பதிப்பகம் என்று தொடங்கினால்/நடத்தி வந்தால் பொன்னியின் செல்வன் அச்சிட வேண்டும். தேசிய உடமை என்பதை, நாம் பாரட்ட இதை விட வேறு என்ன வேண்டும் ? அடுத்த வருடத்திற்குள் கல்கியின் படைப்புகளை படித்து முடிக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் சிறு கதைகள், சொச்சமாக உள்ளன.

தம்பி இந்த கண்காட்சி பற்றி எழுதியதை படிக்க : நமக்கான குறிப்புக்கள்