பொங்கல் !

தை பிறந்தது ! பொங்கல் நிறைந்தது, (விடுப்பின்) நிம்மதி பரவியது 🙂

பொங்கலோ பொங்கல் !...

பொங்கலோ பொங்கல் !…

தன் வாழ்கை, தன் கையில் என தன்மானமுடன் சொல்லக் கூடிய விவசாயின் விழா பொங்கல். சூரியனுக்கும் அவன் தரும் பலனுக்கும் நன்றி சொல்லி படையல் இட்டு, குடும்பத்துடன் கொண்டாடும் திருநாள் பொங்கல். இந்த வருடமும் இனிதே நிகழ்ந்தது.  இத்தகு விழாவின் உச்சம் : உறவுகளுடன் புதுப்பிக்கும் (Renew)  நட்பும், சிரிப்புமே

மாலையில் தான் தை பிறந்தது, காலை மார்கழி வசமே. எனவே வீட்டு பொங்கல் இரவுக்கு தள்ளப்பட்டது. கோவிலில் மட்டும் மதியம் வைத்து முடிதோம். அங்கு எடுத்த படம் தான் இங்கு உள்ளது. ஒவ்வொரு வருடமும் பொங்கலை நோக்கிய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் : வருடத்தில் கரும்பு சாப்பிட கிடைக்கும் தருணங்களை நோக்கி; வகை வகையான காய்களுடன் குழம்பும், வெஞ்சனமும் அமையும். அதுவும் நம் பகுதியில் விளையும் பிரத்தியேக கிழங்கு வகைகள், பரங்கி பிஞ்சு, பிலாக்கா, வாழைகாய் இன்னும் இன்னும்… இன்பம் தான்.  (கோவிலில் மட்டுமே சாப்பிடும்) சுட சுட சக்கரை பொங்கல், அதுவும் வீட்டில் சாப்பிடும் திருப்தி. ஒரு ஜான் வயிறு படும் சந்தோசத்தின் பாடு தான் சொல்லி மாளாது !