படிங்கப் பா !

வாசிப்பில் தான் எத்தனை இன்பம் ?

உலகை மறந்து,
உணர்வுகளில் திளைத்து,
மனதை நிறைத்து,
துயரம் குறைந்து,
வாழ ஒரு உலகுக்கும்
வழி செய்யும் விந்தை  – வாசிப்பு !

Read on

சலிப்பில்லாமல் உடல் சாகும் வரை
தவிப்பில்லாமல் மனம் தாவும் வரை
கழிப்பில்லாமல் உடல் நோகும் வரை
வழியில்லாமல் வானம் தெரியும் வரை
வாசிப்போம் ! நேசிப்போம் ! சுவாசிப்போம் !
பரவசம் அடைவோம்,
இறைநிலை எய்துவோம் !

பொங்கல் !

தை பிறந்தது ! பொங்கல் நிறைந்தது, (விடுப்பின்) நிம்மதி பரவியது 🙂

பொங்கலோ பொங்கல் !...

பொங்கலோ பொங்கல் !…

தன் வாழ்கை, தன் கையில் என தன்மானமுடன் சொல்லக் கூடிய விவசாயின் விழா பொங்கல். சூரியனுக்கும் அவன் தரும் பலனுக்கும் நன்றி சொல்லி படையல் இட்டு, குடும்பத்துடன் கொண்டாடும் திருநாள் பொங்கல். இந்த வருடமும் இனிதே நிகழ்ந்தது.  இத்தகு விழாவின் உச்சம் : உறவுகளுடன் புதுப்பிக்கும் (Renew)  நட்பும், சிரிப்புமே

மாலையில் தான் தை பிறந்தது, காலை மார்கழி வசமே. எனவே வீட்டு பொங்கல் இரவுக்கு தள்ளப்பட்டது. கோவிலில் மட்டும் மதியம் வைத்து முடிதோம். அங்கு எடுத்த படம் தான் இங்கு உள்ளது. ஒவ்வொரு வருடமும் பொங்கலை நோக்கிய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் : வருடத்தில் கரும்பு சாப்பிட கிடைக்கும் தருணங்களை நோக்கி; வகை வகையான காய்களுடன் குழம்பும், வெஞ்சனமும் அமையும். அதுவும் நம் பகுதியில் விளையும் பிரத்தியேக கிழங்கு வகைகள், பரங்கி பிஞ்சு, பிலாக்கா, வாழைகாய் இன்னும் இன்னும்… இன்பம் தான்.  (கோவிலில் மட்டுமே சாப்பிடும்) சுட சுட சக்கரை பொங்கல், அதுவும் வீட்டில் சாப்பிடும் திருப்தி. ஒரு ஜான் வயிறு படும் சந்தோசத்தின் பாடு தான் சொல்லி மாளாது !

தீபம்

இருளில் இருந்து ஒளிக்கு வருவேதே வாழ்வின் நியதி. பிறக்கும் போது தாயின் இருட்டு கருப்பையில் இருந்து உலகினுள் வருகிறோம். பின்னர் ஞான ஒளியை துலங்க செய்ய பாடுபடுகிறோம்…… ஒளி என்பது இன்பத்தின் பொருள். வளர்ச்சியை நோக்கி விடியல்கள் விரியட்டும் !

final

சில மாதங்களுக்கு முன் எதேச்சியாக எடுத்த படம். இந்த நாளில் பதிவிடுவதில் மகிழ்ச்சி 🙂   இந்த தளம் தொடங்கி ஆண்டு ஒன்று சென்று விட்டது.  ஒளிகளில் இன்னும் இன்னும் வண்ணம் படைக்க, படம் பிடிக்க தான் ஆசை.

நேர்த்தி செம்பருத்தி

காலை எழுந்தவுடன் என்னை பார்த்து சிரித்தது. எதாவது வித்தியாசமான கோணத்தில் என்னை படம் பிடி – எனவும் கூவி அழைத்தது, நானும் (மனமிரங்கி,) மனமயங்கி சில படங்கள் எடுத்தேன். இதழ்களில் வெயில் விழுவது போல முயற்சி செய்தேன். பின்பு, பூவை போகஸ் செய்து, பின்சூழலில் உள்ளவற்றை மங்கலாகி இதனை எடுத்தேன். எனக்கே பரம திருப்தி.

hibiscus flower

பூ

இறைவனோ இயற்கையோ எதோ ஒரு ஒழுக்கம் ஒலகை இயக்குகிறது என்பதை நாம் நம்பியேயாக வேணும். நேர்த்தியின் நிறைவு எங்கும் வியாபித்து விரிந்துக் கிடக்கிறது. கல்பகோடி காலமாக உலகும் அதன் இயக்கமும் பரிணாமமும் வீறு நடைபோடுகிறது. ஆனாலும் சில செயல்கள், இம்மியும் பிசகாமல், அப்படி அப்படியே, மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது : அலையின் ஓசையும் ஆட்டமும், சூரிய விடியல் (ஆதாகப்பட்டது, பூமியின் சுத்தும் வேகம்), காற்றின் திரியல், மழை, இனப் பெருக்கம்…. இந்த செம்பருத்தி பூக்கும் முறையும், அதன் வடிவமும் இதில் சேரும் ! பூவை வர்ணிக்க தான் ஆசை, ஆனாலும் ஒரு பெரும் குறை, மலரின் பாகங்களின் தமிழ்ப்பெயர் ஒண்ணுமே தெரியவில்லை! ஓரத்தில் மட்டும் இதழ் உள்ளது, அழகாக அமைதியாக….. போதும், படமே பேசட்டும்.