நேர்த்தி செம்பருத்தி

காலை எழுந்தவுடன் என்னை பார்த்து சிரித்தது. எதாவது வித்தியாசமான கோணத்தில் என்னை படம் பிடி – எனவும் கூவி அழைத்தது, நானும் (மனமிரங்கி,) மனமயங்கி சில படங்கள் எடுத்தேன். இதழ்களில் வெயில் விழுவது போல முயற்சி செய்தேன். பின்பு, பூவை போகஸ் செய்து, பின்சூழலில் உள்ளவற்றை மங்கலாகி இதனை எடுத்தேன். எனக்கே பரம திருப்தி.

hibiscus flower

பூ

இறைவனோ இயற்கையோ எதோ ஒரு ஒழுக்கம் ஒலகை இயக்குகிறது என்பதை நாம் நம்பியேயாக வேணும். நேர்த்தியின் நிறைவு எங்கும் வியாபித்து விரிந்துக் கிடக்கிறது. கல்பகோடி காலமாக உலகும் அதன் இயக்கமும் பரிணாமமும் வீறு நடைபோடுகிறது. ஆனாலும் சில செயல்கள், இம்மியும் பிசகாமல், அப்படி அப்படியே, மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது : அலையின் ஓசையும் ஆட்டமும், சூரிய விடியல் (ஆதாகப்பட்டது, பூமியின் சுத்தும் வேகம்), காற்றின் திரியல், மழை, இனப் பெருக்கம்…. இந்த செம்பருத்தி பூக்கும் முறையும், அதன் வடிவமும் இதில் சேரும் ! பூவை வர்ணிக்க தான் ஆசை, ஆனாலும் ஒரு பெரும் குறை, மலரின் பாகங்களின் தமிழ்ப்பெயர் ஒண்ணுமே தெரியவில்லை! ஓரத்தில் மட்டும் இதழ் உள்ளது, அழகாக அமைதியாக….. போதும், படமே பேசட்டும்.

1 thoughts on “நேர்த்தி செம்பருத்தி

  1. நேர்த்தியானதொரு படம்
    நேர்த்தியான ஒரு தோழரிடம்!!

    Good, Better, Best எதுவும் வேண்டாம்.
    செயல் எதிலும் உன்னதம், நேர்த்தி. இதுவே போதும்.

    குட்டி குட்டி எபிகள் உள்ளன.
    படத்தில் உள்ள நிறைவே போதுமே!

பின்னூட்டமொன்றை இடுக