கடல் காவேரி

இந்த சனிக்கிழமை நண்பர்களுடன் பயணம் இனிதே சென்றது, நடுவில் காவேரியை தாண்டி சென்றோம். ஆஹா வெள்ளமாக ஓடும் நதி, பார்க்க பார்க்க வெல்லமாக இனித்தது.

பொன்னி தாய்

பொன்னி தாய்

பல காலம் முன் வீட்டில் சொல்லி சொல்லி மனப்பாடம் செய்து வைத்த சிவன் பாடல் நெஞ்ஞில் உதித்தது :

நன்றுடையானை தீயது இல்லானை,
நரை வெள்வேறு ஒன்று உடையானை !
உமை ஒரு பாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை,
சிராப்பள்ளிக் குன்று உடையானை – கூற
என் உள்ளம் குளிரும்மே !

(திருஞானசம்பந்தர்)

நல்லதைக் கொண்டவன், தீயதே இல்லாதவன், வெண்மை (நரை) நிறம் கொண்ட எருதை உடையவன். உமையாம்பிகையை ஒரு பாகத்தில் கொண்டவன். அடைய முடியாதை செல்வத்தையும் புகழுக்கும் உடையவன் , திருவின் மொத்த உருவம் அவன். (திரு)சிராப்பள்ளி குன்றை தன் வசம் கொண்டவன், இப்படி பட்ட எம்பிரானை, தாயுமானவனை பற்றிக் கூறக்கூற என் உள்ளம் குளிர்ந்து போகிறது.

இவ்வளவு பார்த்து விட்டு கோவிலுக்கு செல்லாமல் திரும்ப முடியவில்லை. அவன் அருளால் தரிசனம்(, நண்பர்களுடன்) இனிதே முடிந்தது.

இன்று 172டாவது உலக புகைப்பட தினம், வாழ்த்துக்கள் அனைவருக்கும். என்னை ஊக்குவித்த தம்பிக்கும் தோழிக்கும் நன்றி பல. (இந்த வருடம் மறக்க முடியாத ஒன்று நடந்துள்ளது, என் புகைப்டம் என் desktop wallpaerராக மாறியுள்ளது #மகிழிச்சி #பெருமை #என்_அளவில்_சாதனை)

Advertisements

2 thoughts on “கடல் காவேரி

  1. கரைதொட்டு ஓடும் காவிரியைப் பார்த்து மனம் குளிர்ந்தது. ஸ்ரீரங்கம் போனீர்களா?
    உங்கள் புகைப்படத்தைப் போட்டு எங்களுக்கும் மறக்க முடியாத ஆண்டாகச் செய்யலாமே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s