இனிப்பு இன்பங்கள்!

இன்றைய தலைப்பு : sweet -> இனிப்பு

மாயாபுரி ISKONநில் வாங்கியது :

சின்ன ஸ்வீட்

சின்ன ஸ்வீட்!

இன்று உங்களுக்குதான் தான் இந்த இனிப்பு…… சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள பல காரணங்கள் உள்ளன. அதனை வரிசை படுத்தி விட்டு, பாரதி கவிதையுடன் இந்த பதிவுக்கு சுபம் :

  • இன்றுடன் ப்ஹோஜஸ் தளம் 100 பார்வைகளை தாண்டி சென்று விட்டது.  (எண்கள் மீது நம்பிக்கை இல்லை, ஆனாலும் ஒரு மகிழ்ச்சி)
  • தொடர்ந்து பத்து நாட்களாக இந்த தளத்தில் பதிவு எழுதி வருகிறேன். இது என் அளவில் சாதனை. அதில் சிலவற்றை தமிழ் தம்பி அவர்கள் விரும்பியது, இரட்டிப்பு மகிழ்ச்சி.
  • நாற்சந்தி இன்று, அதன் இரண்டாம் வருட பயணத்தை தொடர்கிறது.
  • இன்று பாரதி பிறந்தநாள்
  • இன்று முதல், youtubeலிம் களம் இறங்கு உள்ளேன். முதல் ஒலி  : http://www.youtube.com/watch?v=rrciRLT_2Bs
  • தமிழ் தம்பியின் பதிவு : தவறவிடக் கூடாதவன் -> http://thamizhg.wordpress.com/2012/12/11/ojas/

இது போல இன்னும் பல பல காரணங்கள். போதும் இந்த தற்பெருமை பாடும் படலம். பாரதி பாடலுக்கு செல்வோம் :

(எனக்கு மிகவும் பிடித்த பாரதி கவிதை, இது என்ற காரணத்தால் இங்கே உங்களுக்கும் !)

பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லுவார் — மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்

சரணங்கள்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் — அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்.

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம்செய் வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம
கோணிகள் செய்வோம் இரும் பாணிகள்செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரங் கற்போம்
வானை யளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம்நல்ல காடுவளர்ப்போம்
கலை வளர்ப்போம்கொல்ல ருலைவளர்ப்போம்
ஓவியம் செய்வோம்நல்ல ஊசிகள்செய்வோம்
உலகத் தொழிலனைத்து முவந்துசெய்வோம்.

‘சாதி இரண்டொழிய வேறில்லை’ யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த்தமென்போம்.
நீதிநெறி யினின்று பிறர்க்கு தாவும்
நேர்மையர் மேலவர்; கிழவர் மற்றோர்.

இந்த பாடலை பற்றி ஒரு பதிவே எழுதலாம்………. நிறைய கருத்துகள் உள்ளன. மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக, படித்து சுவைத்து பாருங்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s