மனமும் மழையும்

இன்றைய தலைப்பு : under -> கீழே

ஊரணி

ஊரணி

கீழே தண்ணீர் எங்கே? இது போல (வற்றிப் போன) ஊரணிகள் பல, காரைக்குடி, கானாடுக்காத்தான், புதுவயல் போன்ற, பல சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த மட்டில், நாம் ‘வானம் பார்த்த பூமி’ தான். மழை என்பதே நம் பயிர்களின் உயிர் நீராக உள்ளது. வட மாநிலங்கங்களில் உள்ள ஆறுகளை பார்த்தால் நமக்கு பிரம்மிப்பு தான். அவை என்றும் ஓடுகின்றன, அகலமாகவும் உள்ளன.

பல வருடங்களாக, மழை பெய்வது மிகவும் குறைந்து விட்டது. தீபாவளி முதல் பெரிய கார்த்திகை வரை பெய்யும் மழை தான், நம் பொங்கல் பயிர்களை உருவாக்கும். இந்த நீரை சேமித்து வைத்து, வெயில் காலம் ஆரம்பமாகும் வரையில் பயன்படுத்துவது உத்தமம்.

ஊர்களின் நடுவில் கோவில் இருக்கும். அதன் முன்புறத்தில் இது போன்ற ஊரணிகள் இருக்கும். கல்லல் என்ற ஊரில், விழும் மழை துளி அனைத்தும், ஓடி வந்து, ஊரணியின் நாலா புரத்தில் இருக்கும் துவாரத்தின் மூலம், அதனுள் வந்து விழுகின்றன. அந்த ஊரை அவ்வளவு அழகாக வடிவமைதுள்ளனர் ! எப்படியும் இந்த நீரை சேர்க்க தான், இவை உருவாயின. எங்கும் தண்ணி இல்லாத காலத்தில், இந்த நீரை, குடிநீராக பயன்படுத்துவர்.

நகரங்களாகாத இவ்வூர்களில் இன்னும் இந்த ஊரணிகள் உள்ளன. ஆனால் அவை தண்ணீரை தொட்டு, வருடங்கள் பல ஓடி விட்டன. அதற்கு காரணம் நாமாக கூட இருக்கலாம், என்னும் எண்ணம் தோன்றுகிறது. தெரிந்தோ, தெரியாமலோ சுற்றுசூழலை, நகரவாசிகளாகிய நாம் அழித்து கொண்டு தான் வருகிறோம்.

மரங்களை வெட்டி எறிகிறோம். நம் ஊரில் இருப்பதை மட்டும் அல்ல. நெடுஞ்சாலை போடுகிறோம் என்னும் பேரில், நம் ஊரில் இருந்து பல தூரத்துக்கு இருக்கும் மரங்களையும் புடுங்கி விடுகிறோம். இது தான் நாகரீகத்தின் வளர்ச்சி என்று பெருமை கொள்கிறோம்……..

இது எல்லாம் நீங்கள் அறிந்ததே. நாம் தினமும் பேசி, எழுதி, படித்து, ப்ளாக் செய்து, விவாதிக்கும் விஷயங்களே. என் மனதில் தொக்கி நிற்கும் கேள்வி இதுவே : நம்மால் மழை நின்றது உண்மை. இதனால் ஊரணிகள் நிரம்புவது இல்லை. நாம் இந்த முற்பகலில் செய்வதற்கு, பிற்பகலில் – பல வருடங்களுக்கு பிறகு அனுபவிக்க வேண்டும்…. அன்று நம் நிலை என்ன ? சிந்தித்து பார்க்க கூட முடியவில்லை !

மழையின் நடனத்தை ரசித்து மகிழ போகும் நாள், என்று வரும் இந்த உழவர்களுக்கு !

திக்குக்கள் எட்டுஞ் சிதறி தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்துவெள்ளம்
பாயுது பாயுது பாயுது 
தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம்
சாயுது சாயுது சாயுது 
பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்றுதக்கத
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

– ‘மழைபாரதி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s