உள்ளே வெளியே

இன்றைய தலைப்பு : out + about -> வெளியே + அதை பற்றி

சிங்கப்பூர் நண்பர் கொடுத்த முட்டாய்கள்.

Smarties

Smarties

என்னங்க, தலைப்புக்கும் படத்துக்கும் ஒன்னும் சம்பந்தம் இல்ல…. அது எல்லாம் கேட்கப்பிடாது. ஏதோ ஒரு படத்தை எடுத்து விட்டு ஒரு விளங்கா விளக்கயுரை கொடுப்பது தான் உத்தமம்.

கலர், கலரா இருக்கும் இந்த சிறு இனிப்பு மிட்டாய்களை, வாயில் போட்ட, பத்து விநாடிக்குள் நிறம் மாறி சாக்லேட் பிரவுன் ஆகிவிடும். வெளியே ஒரு தோற்றம், வித விதமான வண்ணங்கள், ஆனால் உள் இருப்பது வேறு => ஒரே கலவையில் செய்யப்பட்ட சாக்லேட். வெளிப் பூச்சு பல, இருந்தும் அனைத்தும் ஒன்றே.

மனிதர்களும் இது போலவே. வெளி தோற்றத்தில் குட்டை, நெட்டை, வெள்ளை, சிவப்பு, நீளம்,…… என எத்தனை எத்தனை மாற்றங்கள். ஆனாலும் உள்ளே நம்மை இயக்குவது ஒரே இதயமும் அதன் துடிப்பும். அதில் உள்ள நல்லவற்றை வளர்க வேண்டும் !

Strange case of Dr.Jekyl and Hide (Robert Stevenson) என்று ஒரு புகழ் பெற்ற நாவல் உள்ளது. Multiple Personality Disorderறை முதன் முதலில் கதை வடிவில் எழுதியதியாது இவராக தான் இருக்க வேண்டும். ஜெகில், ஒரு சிறந்த மருத்துவர். சில ரசாயன ஆராய்சிகள் மூலம் அவர் ஒரு திரவ சேர்க்கையைக் கண்டு பிடிக்கிறார். அதை உட்கொள்ளும் பொழுது, அவரின் உள் உள்ள கெட்ட குணங்கள் மட்டும் ஒரு உருவம் கொண்டு ‘ஹைட்’ வடிவம் கொள்வார். ஒரு பால் குடத்தில் விழுந்த, ஒரு சிறு துளி விஷம் போல, தீய குணங்கள் அவரை தின்று தீரக்க, அவர் என்றும் ‘ஹைட்’டாக இருக்க துடிப்பார்……. மிகவும் சிறிய நாவல், மேலும் புத்தகத்தை வாசியுங்கள் ! (ஆங்கில மின் புத்தகம் பதிவிறக்க)

“உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் !”. உள்ளே வெளியே என்று எந்த பாகுபாடும் இன்றி வாழ கற்று கொள்ள வேண்டும் ………..

இன்றுபுதிதாய் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு,
தின்று வினையாடின் புற்றிருந்து வாழ்வீர்
தீமையெல்லாம் அறிந்துபோம், திரும்பி வாரா !
– ‘சென்றது மீளாது’ பாரதி

Advertisements

One thought on “உள்ளே வெளியே

  1. அருமைங்ணா!
    முன்னமே சொன்ன மாதிரி, ஒவ்வொரு பதிவிலும் போட்டோ நல்லா இருக்கோ இல்லையோ, Content செமையா வருது!
    ஏன் நாற்சந்தி-ல இப்படி எழுதலைனு தோணுது!!
    தலைப்பு இன்னும் சூப்பர்!
    எனக்கு மட்டும் உருப்படியான தலைப்பு இன்னும் சொல்லல!!! #CatchMyPoint !!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s