கல்கி காதல்!

இன்றைய தலைப்பு : Someone You Love ! போக போக கஷ்டம் அதிகரித்து கொண்டே வருகிறது 😉

ஒரு மனிதனின் எழுத்தோவியங்களை படித்து, ஒரு மொழி மீது பேரார்வம் கொள்ள முடியுமா ? சாத்தியம் தான் என்பதற்கு சான்று (எம்) நாற்சந்தி ! (எனக்கும் கொஞ்சம் தமிழ் பற்று, கல்கி பற்று உள்ளது என நம்புகிறேன்)

கல்கி - கிருஷ்ண மூர்த்தி

கல்கி – கிருஷ்ண மூர்த்தி

{பாரதி பாடல்கள் புத்தகத்தை எங்கோ போட்டு விட்டேன். இருந்தும் இணையம் ‘தமிழ் இணைய பல்கலைகழகம்‘  கை கொடுத்தது. தேடல் தந்த பாடல்.}

தொழில்

பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே!
பரத நாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே!
நாட்டிலே அறம் கூட்டி வைப்பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே;
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே!

– பாரதி

கல்கியை பற்றி கொஞ்சம் : மேலே உள்ள பாரதீ பாடலுக்கும் கல்கிக்கும் பொருத்தம் ரொம்ப அதிகம். அவர் ‘செய்க செய்க’ என்று சொல்லியதை, செய்தவர் கல்கி. தமிழ் இசை வளர்த்ததில் கல்கியின் பங்கு மிக அதிகம். அதே போல பல அழுகு தமிழ் பாடல்கள் அவர் எழுதியுள்ளார். அதில் ஒன்று : பூங்குயில் கூவும் பூஞ்சோலை !

கல்கி ஒரு சிறந்த விமர்சகர். பரத நாட்டியம் அவருக்கு அத்துபடி. அதற்கு அத்தாட்சி அவரது மகள் ஆனந்தி மற்றும் சிவகாமியின் சபதம் (புத்தக எண் :193) சிவகாமி – நடன அரசி, ஆயனர் – நடன சிற்பி !

நாட்டுக்காக கல்கி தன் படிப்பை துறந்து, சிறை வாசம் அனுபவித்தார். இந்தியா அமைந்த பின்பு, அவருக்கு மந்திரி பதவி கிடைத்தது. ஆனாலும் அவர் தெளிவான, துணிச்சலான,  தலையங்கங்கள் மூலம் அரசியலை சரி செய்தார்.

நமக்கு அவர் கொடுத்து சென்றச் எழுத்துகள், நம் இன்பத்துக்கு, நாட்டின் நலனுக்கே, மொழியின் வளர்ச்சிக்கே.

கல்லை தெய்வம் என்று பாவித்து வழிபடுகிறோம், கல்கியும் அமரர் என்று தான் இன்று வரை சொல்லப்பட்டு வருகிறார். நான் அவரை நேரில் சந்தித்து இல்லை, அவரை பார்த்தவர்களை, பார்த்து, பேசி பழகியது இல்லை. ஆனாலும் அவர் என்னை செதுக்கி உள்ளார். எந்த அறிமுகமும் இன்றி அவரை படித்து படித்து, ரசித்து ரசித்து இந்த நிலையில் உள்ளேன். இதை விட வேறு என்ன பண்புகள்  தெய்வத்துக்கு வேணும்? அவர் நகைச்சுவை எழுத்துலக பிரம்மா !

இங்கு குறிப்பிட வேண்டியது : எட்டையபுரத்தில் ‘பாரதீ’க்கு மணி மண்டபம் எழுப்பியவர் கல்கி. அவர் சிறந்த பாரதி பக்தர் மற்றும் ரசிகர். கல்கி இதழின் குறிக்கோள், அன்று அவர் எடுத்து கொண்டது, இன்றும் அச்சில் (மட்டும்) உள்ளது : தமிழ்திரு நாடுதன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா பாரதி !

இந்த 11ஆம் தேதி (11/11/2012) , நாற்சந்தியின் முதல் பிறந்தநாள்.

நாற்சந்தி நாயக,

நுமக்கு நல்வணக்கங்கள் !!!

நீ இல்லாமல்  – எம்

தமிழ் இல்லை 🙂

உன் மீதான, என் காதலைச் சொல்ல, உன் போல நான் மாற வேண்டும் !!!!

Advertisements

2 thoughts on “கல்கி காதல்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s