மேலே சூரியன்!

இன்றைய தலைப்பு : Looking Up

மேலே உன்னை பார்த்தேன்.

மென்மேலும் வளர துடித்தேன் !

வரம் கொடு ஆதவ – நாம்

வாழ வளம் கொடு !

{ நண்பர் வீட்டில் எடுத்தது}

சூரியன்

சூரியன்

{நண்பர் சொன்ன கவித, யாருன்னு சொல்லுங்க பார்போம்}

உயிர் செழிக்கச் செய்வாய் – மண்ணில்
பயிர் செழிக்கச் செய்வாய்! – வைகறையில்
துயில் எழச் செய்வாய்!

border

{ ஒரு சூரியனை பற்றி ஒரு சூரிய தீ-யின் கவிதை }

சூரிய தரிசனம்

[காலை வேளையில், கடற்கரையில்,

சூரியன் மேகங்களால்  மூடப்பட்டிருக்க,

முகம் காட்டும்படி அவனை வேண்டிப் பாடிய பாடல்கள்.]

சுருதியின் கண் முனிவரும் பின்னே
தூமொழிப் புலவோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்:
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே, பொன்செய் பேரொளித் திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே !

வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாதவார் கடலின்னொலி யோடு
நற்றமிழ்ச் சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர் கணத்துள்ளே
கடுகி யோடும் கதிரினம் பாடி
ஆதவா, நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

– பார’தீ’

Advertisements

2 thoughts on “மேலே சூரியன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s